ETV Bharat / sports

SAFF Championship: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி! - அரையிறுதிப் போட்டி

ஆட்ட இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்த நிலையில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் குவைத்தை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

saff championship
தெற்காசிய கால்பந்து ஆட்டம்
author img

By

Published : Jul 5, 2023, 10:43 AM IST

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு தொடரின் 14வது சீசன் கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-இல் இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் அணிகளும், குரூப் பி-இல் லெபனான், மாலத்தீவுகள், பூடான் மற்றும் வங்கதேச அணிகளும் இடம் பெற்றிருந்தன.

அரையிறுதிப் போட்டிக்கு குவைத், வங்கதேசம், இந்தியா மற்றும் லெபனான் ஆகிய அணிகள் தகுதி பெற்று முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குவைத்தும், அடுத்த அரையிறுதியில் லெபனான் அணியை பெனால்டி ஷாட் அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இதன் இறுதி ஆட்டமானது பெங்களூரில் வைத்து நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் குவைத் மற்றும் இந்தியா மோதியது. இதில் குவைத் அணியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் யாரும் மஞ்சள் கலர் ஜெர்சி போடாதீங்க - நடிகர் சதீஷ் பேட்டி!

இரு அணிகளும் ஆட்ட இறுதி நேரத்தில் தலா ஒரு கோல் அடித்து சம நிலையில் இருந்தன. இதனால் பெனால்டி ஷாட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து தொடங்கி வைத்தார். பின்பு அடுத்தடுத்து சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் ஆகியோர் பெனால்டியை சரியாகப் பயன்படுத்தி 5 கோல் அடித்தனர்.

ஆனால், குவைத் அணி சார்பில் ஃபவாத் ஒதைபி அல், அகமது தெஃபிரி அல் உள்ளிட்டோர் தலா ஒரு கோல் அடித்து மொத்தம் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதில் இந்திய அணி பெனால்டி ஷாட் அவுட்டில் வெற்றி பெற கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து திறமையாக குவைத் அணியின் கோலை தடுத்ததே வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியா, குவைத் அணியை இறுதி ஆட்டத்தில் 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் வருகின்றன.

இதையும் படிங்க: ஐசிசி உலகக்கோப்பையில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.