பிரிஸ்பேன்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை பிரிஸ்பேனில் உள்ள கபாவில் இன்று(அக்.17) நடந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது.
அதில் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் 33 பந்துகளில் 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 33 பந்தில் 50 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆஷ்டன் அகர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். 5 ஓவர்களில் 56 ரன்கள்,கே.எல். ராகுல் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதன் பின்னர் கேப்டன் ரோஹித் சர்மாவும் கியர்களை மாற்றி, ஆறாவது ஓவரில் கிளென் மேக்ஸ்வெல்லை ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரிக்கு விளாசினார். ஆட்டத்தின் முதல் பவர்பிளே முடிவில், இந்திய அணியின் ஸ்கோர் 69/0.
8வது ஓவரில், கே.எல்.ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் தனது அணிக்கு ஒரு பெரிய திருப்புமுனையை வழங்கினார். ஆஷ்டன் அகர் தனது அணிக்கு இந்திய கேப்டன் ரோஹித்தின் பெரிய விக்கெட்டை வழங்கினார்.
அவர் ஒரு பந்தை டீப் மிட் விக்கெட்டுக்கு இழுக்க முயன்றார், ஆனால் 9வது ஓவரில் மேக்ஸ்வெல்லிடம் எளிதான கேட்ச் கொடுத்து 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.10 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 89/2. அதன் பின்பு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் சீரான இடைவெளியில் சிங்கிள்களை எடுத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகளுக்கு அடித்தனர்.
13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த விராட் கோலி, பின்னர் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 2 ரன்கள் எடுத்து வெளியேறினார், 10 ஓவர்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் வீரர்கள் போராடி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின்னர் தினேஷ் கார்த்திக் 20 ரன்னுக்கும், அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், மேக்ஸ்வெல், அகார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க:அடுத்த பிசிசிஐ தலைவர் யார்..? களமிறங்கும் பிரபலங்களின் வாரிசுகள்...