ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் எனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன் - பவானி தேவி

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் எனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி பதக்கம் வெல்வேன் என தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 19, 2021, 9:42 PM IST

I will give my best in Tokyo Olympics: Bhavani Devi

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி. இவர், அண்மையில் ஹங்கேரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்குத் தகுதிபெற்றார்.

இதன் மூலம், இந்தியா சார்பில் வாள்சண்டை பிரிவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிப்பெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை பவானி தேவி படைத்தார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் எனது முழுத்திறனையும் பயன்படுத்தி இந்தியாவிற்காக பதக்கம் வெல்வேன் என பவானி தேவி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "நான் முதலில் இதனை விளையாட்டாகதான் கற்றுக்கொண்டேன். அதன்பின் நான் பங்கேற்ற முதல் தொடரில் தோல்வியடைந்தேன். ஆனால், எனது சக நண்பர்கள் அத்தொடரில் பதக்கங்களை கைப்பற்றியிருந்தனர். அந்ததருணம்தான் என்னை இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டச்செய்யது.

அதன்பின் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்குப் பிறகு, நானும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட வேண்டுமென ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், முதலில் எனது குடும்பத்தினர் மட்டுமே என்னை ஊக்கப்படுத்தினர்.

பின்னர் 2015ஆம் ஆண்டிலிருந்து எனக்கு வெவ்வேறு வழிகளில் உதவிகளும், அரசு சார்பிலான உதவிகளும் கிடைத்தன. அப்போதுலிருந்து நான் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக என்னைத் தயார்படுத்தி வந்தேன். மற்ற வீரர்களைக் காட்டிலும் நான் அதிகமான உழைப்பைச் செலுத்தினேன்.

அதன் பயணாக, தற்போது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்குத் தகுதி பெற்றுவிட்டேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒலிம்பிக்கில் எனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி இந்தியாவிற்காக பதக்கம் வெல்வதே எனது லட்சியம்" என்றார்.

இதையும் படிங்க: ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதிச்சுற்றில் வெளியேறிய லக்‌ஷயா சென்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.