ETV Bharat / sports

ஹாக்கி ஜாம்பவான் சரண்ஜித் சிங் மாரடைப்பால் காலமானார் - இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், மிட்-பீல்டருமான சரண்ஜித் சிங் தனது 90ஆவது வயதில் காலமானார்.

Hockey legend Charanjit Singh dies at 90

author img

By

Published : Jan 28, 2022, 7:21 AM IST

சிம்லா: சரண்ஜித் சிங் 1964ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும், மிட்-பீல்டராகவும் இருந்தவர். ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் உடல் கல்வித்துறை இயக்குநராக பணியாற்றினார். இந்தப் பணி ஒய்வுக்கு பிறகு வீட்டிலேயே இருந்தார்.

அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன. அடுத்த மாதம் தனது 91ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில், நேற்று(ஜன.17) அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.

  • On behalf of Hockey India, we mourn the loss of a great figure of Indian Hockey, Shri Charanjit Singh.

    May his soul Rest in Peace🙏 pic.twitter.com/PTb38lHDS6

    — Hockey India (@TheHockeyIndia) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், சரண்ஜித் சிங்கின் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய ஹாக்கி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: IND vs WI: அணிக்கும் திரும்பும் ரோஹித்; பும்ராவுக்கு ஓய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.