நைராபி (கென்யா): 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தடகள சாம்பியன்ஷிப் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், நீளம் தாண்டுதல் இறுதிச்சுற்றுப் போட்டி இறுதி நாளான நேற்று (ஆக. 22) நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய வீராங்கனை ஷைலி சிங், 6.59 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த மஜா அஸ்காக் 6.60 மீட்டர் தாண்டி தங்கத்தை தட்டிச்சென்றார்.
இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் ஷைலி சிங், 6.59 மீட்டரைத் தாண்டி தன்னுடைய அதிகபட்ச சாதனையை பதிவுசெய்தார். ஆனால், நான்காவது சுற்றில் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளத்தை தாண்ட, ஒரு செ.மீட்டர் வித்தியாசத்தில் ஷைலி சிங் தங்கத்தை தவறவிட்டார். மஜா அஸ்காக் நடப்பு ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் என்பது கவனிக்கத்தக்கது.
17 வயதுதான் ஆகிறது...
இப்போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஷைலி சிங் கூறுகையில், "6.59 மீட்டர் நீளத்தை விட அதிகமாக நான் தாண்டி இருந்தால், தங்கத்தை வென்றிருப்பேன். தங்கப் பதக்கம் வெல்வது குறித்தும், வென்றால் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் ஒலிப்பது குறித்தும் என்னுடைய அம்மா கூறியிருந்தார். ஆனால் என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
எனக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால், அடுத்து கொலம்பியாவில் (2022) நடைபெற இருக்கும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தொடரில் நிச்சயம் தங்கம் வெல்வேன். மேலும், அடுத்தடுத்து நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாகப் பயிற்சி பெற உள்ளேன்" என்றார்.
துணையிருக்கும் தாய்
தடகள விளையாட்டுக்குள் நுழைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "பள்ளியில் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன். தடகளத்தில் விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். எனக்கு விருப்பம் என்றேன். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னை லக்னோவில் உள்ள விளையாட்டு விடுதியில் அவர் சேர்த்துவிட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டில் பயிற்சி முகாமில் இணைந்துவிட்டேன்" என்றார், ஷைலி சிங்.
தாயாருடைய கவனிப்பில் ஷைலி சிங் வளர்ந்துவருகிறார். அவரின் தாயார் டெய்லராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது, ஷைலி பெங்களூருவில் உள்ள அஞ்சு பாபி ஜார்ஜின் பயிற்சி அகாதமியில் பயிற்சிபெற்று வருகிறார். மேலும், அஞ்சு பாபியின் கணவரான ராபர்ட் பாபி ஜார்ஜ் தான் ஷைலி சிங்கின் பயிற்சியாளராக இருக்கிறார்.
நீரஜ் சோப்ராவுக்குப் பின்...
ராபர்ட் பாபி ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தங்கம் வெல்ல முடியவில்லை என ஷைலி கண்ணீர் வடித்தார். அவர் தாண்டி முடிக்கும்போது (Landing) சிறு குறைபாடுகள் இருந்தன. அதை சீர்செய்துவிட்டால் அவரால் 6.70 மீட்டர் வரை தாண்டியிருக்க முடியும். ஷைலி வெள்ளிப் பதக்கத்தை வெறுப்பவர். நீரஜ் சோப்ராவுக்கு பின் இந்தியாவின் பெரிய நம்பிக்கை அவர். இன்னும், சில ஆண்டுகளில் தேசிய அளவிலும், அதன்பின் சர்வதேச அளவிலும் சிறந்த வீரராக வலம் வருவார்" என்றார்.
-
#ShailiSingh (1/3)
— Anju Bobby George (@anjubobbygeorg1) August 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
In 2017, Bobby and I came across a young girl from Jhansi. We scouted her later that year in the junior national competition and decided to induct her into the Anju Bobby Sports Foundation in 2018. pic.twitter.com/7PAQab34ve
">#ShailiSingh (1/3)
— Anju Bobby George (@anjubobbygeorg1) August 22, 2021
In 2017, Bobby and I came across a young girl from Jhansi. We scouted her later that year in the junior national competition and decided to induct her into the Anju Bobby Sports Foundation in 2018. pic.twitter.com/7PAQab34ve#ShailiSingh (1/3)
— Anju Bobby George (@anjubobbygeorg1) August 22, 2021
In 2017, Bobby and I came across a young girl from Jhansi. We scouted her later that year in the junior national competition and decided to induct her into the Anju Bobby Sports Foundation in 2018. pic.twitter.com/7PAQab34ve
உங்களின் மனைவி அஞ்சு பாபியின் சாதனையான 6.80 மீட்டரை ஷைலி கடப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்ற கேள்விக்கு, "மூன்று ஆண்டுகள் ஆகலாம், ஏன் அதற்கு முன்னர் கூட அதை அடையலாம்" எனப் பதிலளித்தார், ராபர்ட் பாபி ஜார்ஜ்.
மேலும் அவர் "அவருடைய வேகம்தான் அவரின் பலம். தற்போது அவருக்கு வயது 17, அவர் 18 வயதை எட்டுவதற்காக நான் காத்திருக்கிறேன். அந்த நேரத்தில், நான் அவருடைய திறனை மேம்படுத்த பெரிய அளவில் பயிற்சியளிப்பேன். அவர் அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறும் அளவிற்கு வல்லமைப் பெற்றிருக்கிறார்" என்றார்.
-
Watch #ShailiSingh 's magical jump that landed her the #U20WorldChampionships silver again. 📷 World Athletics. music: Thunderstruck- AC/DC pic.twitter.com/005hCHNE5V
— Athletics Federation of India (@afiindia) August 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Watch #ShailiSingh 's magical jump that landed her the #U20WorldChampionships silver again. 📷 World Athletics. music: Thunderstruck- AC/DC pic.twitter.com/005hCHNE5V
— Athletics Federation of India (@afiindia) August 23, 2021Watch #ShailiSingh 's magical jump that landed her the #U20WorldChampionships silver again. 📷 World Athletics. music: Thunderstruck- AC/DC pic.twitter.com/005hCHNE5V
— Athletics Federation of India (@afiindia) August 23, 2021
மூன்று பதக்கங்கள்
இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலம் என மூன்று பதக்கங்களோடு இந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரை நிறைவு செய்துள்ளது.
முன்னதாக, 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும், 10,000 மீட்டர் நடை பந்தயத்தில் அமித் காத்ரி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். 2016 சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ராவும், 2018 சாம்பியன்ஷிப்பில் ஹீமா தாஸும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.