அக்டோபர் மாதத்தில் தேசிய விளையாட்டு ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட 41 விளையாட்டுக் கழகங்களுக்கான உத்தரவுகள், தேசிய விளையாட்டு குறியீட்டின்கீழ் தான் உள்ளது என்ற ஆதாரத்தை சமர்பிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் மத்திய அரசால் 41 விளையாட்டு கழகங்களுக்கு, தேசிய விளையாட்டு ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இதனை எதிர்த்து விளையாட்டு ஆர்வலரும், வழக்கறிஞருமான ராகுல் மெஹ்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹீமா கோலி, நஜ்மி வாசிரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் மாதத்தில் 41 விளையாட்டு கழகங்களுக்கு எதன் அடிப்படையில் தேசிய விளையாட்டு ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த அங்கீகாரங்கள் தேசிய விளையாட்டு குறியீட்டு விதிமுறையின் கீழ் தான் உள்ளது என்ற ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியது.
அதில் ராகுல் மெஹ்ரா தாக்கல்செய்த மனுவின் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கவில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு ஆணையம் ஆகியவை தொடர்ந்து மோசமாக செயலற்றத்தன்மையில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளதால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றனர். இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இலக்கை அல்ல, ஆட்டத்தை முடிக்கவே நினைத்தேன்”- மார்தட்டும் ரஹானே!