கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பெருந்தோற்றின் அச்சுறுத்தலால், ஒலிம்பிக் உள்பட அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ, வருங்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கருத்தில் கொண்டு, இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, அரசு 'டாப்ஸ்' (TOPS) என்ற புதிய திட்டத்தை கண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 'இளம் விரர்களை ஊக்குவிக்கும் விதமாக திறமை அடையாளம் காணல், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி, பயணங்கள், சாத்தியமான வசதிகள், உலகின் சிறந்த பயிற்சியாளர்களைப் பெறுதல் போன்றவற்றிலிருந்து தொடர்ச்சியான திட்டமிடல் உள்ளன.
அதற்காக கெலோ இந்தியா போன்ற ஒரு பெரிய தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மேலும் பல செயல்முறைகள் மூலம் திறமைகளை அடையாளம் காணவும் தொடங்கிவுள்ளோம். ஏற்கனவே இருக்கும் சீனியர் வீரர்களை தவிர ஒரு ஜூனியர் வீரர்களுக்கான ஒலிம்பிக் போடியம் திட்டத்தை (டாப்ஸ்) அரசு தொடங்கியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.