#LinzOpen: ஆஸ்திரியாவில் நடைபெற்று வரும் லின்ஸ் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 15 வயதேயான அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், லாட்வியா டென்னிஸ் வீராங்கனையான ஜெசெனா ஓஸ்டாபென்கோவை எதிர் கொண்டார்.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகோ முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஜெசெனாவிற்கு அதிர்ச்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் ஜெசெனா 6-1 என்ற கணக்கில் கோகோவை வீழ்த்த, ஆட்டத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதன் பின் தனது அதிரடி ஆட்டத்தை ஆடிய, கோகோ மூன்றாவது செட்டை 6-2 என்றக் கணக்கில் கைப்பற்றினார்.
இதன் மூலம் 15 வயதேயான கோகோ காஃப் 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்குகளில் ஜெசெனா ஓஸ்டாபென்கோவை வீழ்த்தி லின்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
-
The winning moment ☺️@CocoGauff | #TeamUSATennis pic.twitter.com/0wPDZguBXp
— USTA (@usta) October 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The winning moment ☺️@CocoGauff | #TeamUSATennis pic.twitter.com/0wPDZguBXp
— USTA (@usta) October 13, 2019The winning moment ☺️@CocoGauff | #TeamUSATennis pic.twitter.com/0wPDZguBXp
— USTA (@usta) October 13, 2019
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் கோகோ காஃப் தனது முதலாவது விம்பிள்டன் பட்டத்தைப் பெற்றார். மேலும் உலக டென்னிஸ் வரலாற்றில் குறைந்த வயதில் விம்பிள்டன் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டென்னிஸில் 15 வயதில் வரலாறு படைத்த ''கோகோ காஃப்''!