பர்மிங்ஹாம்: காமன்வெல்த் தொடரின் இறுதிநாளான இன்று (ஆக. 8) ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் வெண்கலத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச்சேர்ந்த சத்தியன் ஞானசேகரன், இங்கிலாந்தின் பால் டிரிங்ஹால் உடன் மோதினார்.
இப்போட்டியில் முதல் மூன்று கேம்களை 11-9, 11-3, 11-5 என்ற கணக்கில் வென்ற சத்தியன், அடுத்த மூன்று கேம்களை 8-11, 9-11, 10-12 என்ற கணக்கில் இழந்தார். இதனால், 3-3 என்ற கணக்கில் போட்டி சமனில் இருந்தது.
தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் 7ஆவது கேமில், தொடர்ந்து இருவரும் போட்டி போட்டிக்கொண்டு புள்ளிகளை பெற்று வந்தனர். ஒரு கட்டத்தில் 8-8 கேம் புள்ளிகளைப்பெற்ற சத்தியன் அடுத்தடுத்து புள்ளிகளைப்பெற்று, 11-9 என்ற கணக்கில் ஆறாவது கேமை வென்று வெண்கலத்தை உறுதிசெய்தார்.
-
Another Bronze for INDIA
— Manish🇮🇳 (@manibhaii16) August 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sathiyan gnanasekaran has won the country another bronze in table tennis.
This was full of twist and turns but atlast we got the medal
Jai hind#SathiyanGnanasekaran #CommonwealthGames22 pic.twitter.com/v395joOcf6
">Another Bronze for INDIA
— Manish🇮🇳 (@manibhaii16) August 8, 2022
Sathiyan gnanasekaran has won the country another bronze in table tennis.
This was full of twist and turns but atlast we got the medal
Jai hind#SathiyanGnanasekaran #CommonwealthGames22 pic.twitter.com/v395joOcf6Another Bronze for INDIA
— Manish🇮🇳 (@manibhaii16) August 8, 2022
Sathiyan gnanasekaran has won the country another bronze in table tennis.
This was full of twist and turns but atlast we got the medal
Jai hind#SathiyanGnanasekaran #CommonwealthGames22 pic.twitter.com/v395joOcf6
இதே காமன்வெல்த் தொடரில், இந்திய டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி தங்கம் வென்றிருந்தது. அந்தப் போட்டியில், சிறப்பாக விளையாடிய சத்தியன் தங்கம் வெல்ல முக்கியக்காரணமாக இருந்தார். தற்போது, வெண்கலப் பதக்கத்தையும் வென்று இத்தொடரின் 2ஆவது பதக்கத்தை வென்றார்.
இதையும் படிங்க: Exclusive from Birmingham: "சொல்ல வார்த்தையே இல்லை" - தங்கம் வென்ற பின் தமிழ்நாடு வீரர் உவகை!