மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம் என்பது ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சியளிக்கும் பிரத்யேக திட்டமாகும். இதில் புதிதாக இரண்டு குத்துச்சண்டை வீரர்களும், இரண்டு குத்துச்சண்டை வீராங்கனைகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதில் உலக குத்துச்சண்டைத் தொடரில் வெண்கலம் வென்ற சிம்ரன்ஜித் கவுர் (60கி), ஆசிய பதக்கம் வென்ற பூஜா ராணி (75கி) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆடவர் பிரிவில் ஆசிய தொடரில் வெள்ளி வென்ற ஆஷிஷ் குமார் (75கி), ஆசிய தொடரில் வெண்கலம் வென்ற சதீஷ் குமார் (+91கி) ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் ஏற்கனவே மேரி கோம், விகாஷ் கிஷன், மனீஷ் கவுசிக், அமித் பங்கல் ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதேபோல் நிகத் செரீன் (51கி), சோனியா சாஹல் (57கி), சிவா தபா (63கி) ஆகியோரும் டோப்ஸ் மேம்பாட்டு குழுவுக்கு முன்னேறி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: AUS vs IND: தொடக்க வீரராக களமிறங்கும் லபுசானே?