ETV Bharat / sports

எஃப்1: மூன்று கிராண்ட் பிரிக்ஸ் தொடர்கள்  ரத்து!

author img

By

Published : Jun 13, 2020, 2:09 AM IST

கரோனா வைரஸ் காரணமாக அசர்பைஜான், சிங்கப்பூர், ஜப்பானிஸ்  கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 கார் பந்தய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Formula 1: Azerbaijan, Singapore and Japanese races cancelled

கரோனா வைரஸ் காரணமாக ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடைபெறாமல் முடங்கியுள்ளன. இதனால் நடப்பு சீசனில் நடைபெறவிருந்த கிராண்ட் பிரிக்ஸ் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையில் முதலில் எட்டு கிராண்ட் பிரிக்ஸ் தொடர்கள் நடைபெறும் என ஃபார்முலா ஒன் தெரிவித்திருந்தது.

அதன்படி வரும் ஜூலை 7ஆம் தேதி ஆஸ்திரியாவில் தொடங்கும் இந்த தொடர் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி இத்தாலியில் முடிவடையுள்ளது.

இந்நிலையில் இந்த அட்டவணையில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் தொடர், செப்டம்பர் 20ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் இடத்தைச் படத்தின் அக்டோபர் 11-ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஜப்பானிஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் ஆகியவை இடம்பெறவில்லை.

கரோனா வைரஸ் காரணமாக இந்த மூன்று கிராண்ட் பிரிக்ஸ் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஃபார்முலா ஒன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.