கரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, இந்திய விளையாட்டு அமைச்சகம் (சாய்) இணையம் வாயிலாக, ஆன்லைன் கபடி பயிற்சி பட்டறையைத் தொடங்கி நடத்தி வருகிறது. இப்பயிற்சி பட்டறையில் இந்தியா, மலேசியா, கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இப்பயிற்சியின் போது பேசிய இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கபடி விளையாட்டு ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது, இந்தியா மட்டுமல்ல, அனைத்து ஆசிய நாடுகளும் ஒன்றிணைந்து, ஒலிம்பிக்கிலும் இந்த விளையாட்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதுவே எங்களது தலையாய கடைமையாகும்.
இந்த இலக்கை அடைய நாம் இந்தியாவில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு இந்தியா முழுவதும் இந்த விளையாட்டு பரவி வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:’எது நிஜம், எது நிழல் எனத் தெரியவில்லை’... இளம் வீரர்களை சாடிய யுவராஜ் சிங்!