அல் ரேயான்: கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ஈ பிரிவு அணிகளுக்கான போட்டி அஹ்மத் பின் அலி மைதானத்தில் இன்று (நவம்பர் 27) நடந்தது. இந்த போட்டியில் கோஸ்டா ரிகா-ஜப்பான் அணிகள் மோதின. முதல்பாதியில் 2 அணியின் வீரர்களும் கோல் அடிக்கவில்லை. அந்த வகையில் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இரண்டாவது பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. கோஸ்டா ரிகாவின் கீஷர் புல்லர், 81ஆவது நிமிடத்தில் 18 மீட்டர் தொலைவில் இருந்து கோல் அடித்தார்.
ஜப்பான் கோல்கீப்பர் ஷுய்ச்சி கோண்டா போராடியும் பந்தை தடுக்க முடியவில்லை. அதேபோல ஜப்பான் வீரர்கள் எவ்வளவு போராடியும் கோஸ்டா ரிகாவின் கீப்பர் கீலர் நவாஸின் தடுப்பை முறியடித்து கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் கோஸ்டா ரிகா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. ஜப்பான் அணி ஸ்பெயினுடன் அடுத்த போட்டியில் மோதுகிறது. அதேபோல கோஸ்டா ரிகா ஜெர்மனியை எதிர்கொள்கிறது.கோஸ்டா ரிகா தனது முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம்