ETV Bharat / sports

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை... ஃபிஃபா அதிரடி - அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தேர்தல்

நிர்வாகத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடுகள் இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு ஃபிஃபா இடைக்கால தடை விதித்துள்ளது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை

author img

By

Published : Aug 16, 2022, 11:40 AM IST

Updated : Oct 29, 2022, 3:48 PM IST

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா நேற்று (ஆக. 15) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"ஃபிஃபா விதிகளுக்கு எதிராக, நிர்வாகத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடுகள் அதிகமாக உள்ளதால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு (AIFF) இடைக்கால தடை விதிக்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்" என அறிவித்துள்ளது.

மேலும், 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையையும் ஃபிஃபா இந்தியாவிடம் இருந்து பறித்துள்ளது. இதனால், வரும் அக்டோபரில் திட்டமிடப்பட்டிருந்த இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவது கேள்விக்குள்ளாகியுள்ளது.

செயற்குழுவின் அதிகாரங்களை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட நிர்வாகக்குழுவை அமைத்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையாக தேர்தல் நடத்தி தனது செயற்குழுவை அமைத்த பின் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 85 ஆண்டுகளாக உள்ள அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வரலாற்றில் முதன்முறையாக தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தல் 2020ஆம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாத காரணத்தால், கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேலை மே 18ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். டேவ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றம் அமைத்து, கூட்டமைப்பு விவகாரங்களை கையாள அவர்களுக்கு அதிகாரமளித்தது.

மேலும், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு முன்மொழிந்ததன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆக. 3ஆம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு தடை விதிக்கப்படும் என்றும், 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை நடத்தும் உரிமையும் பறிக்கப்படும் என கடந்த ஆக. 5ஆம் தேதி ஃபிஃபா எச்சரிக்கை விடுத்தது.

அதைத்தொடர்ந்து, நிலைமை சீராகாத காரணத்தால் இடைக்கால தடை விதித்து ஃபிஃபா அறிவித்துள்ளது. தொடர்ந்து, இந்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் ஃபிஃபா தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 11ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதிவரை நடைபெற இருந்த 17 வயது உட்பட்டோருக்கான உலக்கோப்பையில் இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த தொடர் குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Exclusive: "மூங்கில் குச்சிகளை வைத்து பயிற்சி செய்தேன்"... இந்திய வீராங்கனை அன்னு ராணி உருக்கம்...

Last Updated : Oct 29, 2022, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.