கத்தார் : உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி செனகல் அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து முதல் கோலை அடித்தது. 38 நிமிடத்தில் அந்த அணியின் ஜோர்டான் முதல் கோலை அடித்தார்.
இதனைத்தொடர்ந்து 48வது நிமிடத்தில் ஹாரி கேன் மற்றொரு கோல் அடித்தார். முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து, இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோல் அடித்தது.
இதனால் அந்த 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க :IND vs BAN: வங்கதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி