ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 59ஆவது தேசிய அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், 100 மீ ஓட்டப்பந்தய பிரிவின் அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த், பந்தய இலக்கை 11.22 விநாடிகளில் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், குறைந்த நேரத்தில் 100 மீ இலக்கை கடந்து தேசிய அளவில் தான் படைத்த முந்தைய சாதனையை (11.26 விநாடிகள்) முறியடித்துள்ளார்.
-
Dutee Chand’s record breaking run in Ranchi - video- @afiindia pic.twitter.com/tJ5r1puS9n
— Doordarshan Sports (@ddsportschannel) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dutee Chand’s record breaking run in Ranchi - video- @afiindia pic.twitter.com/tJ5r1puS9n
— Doordarshan Sports (@ddsportschannel) October 11, 2019Dutee Chand’s record breaking run in Ranchi - video- @afiindia pic.twitter.com/tJ5r1puS9n
— Doordarshan Sports (@ddsportschannel) October 11, 2019
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். பந்தய இலக்கை 11.25 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா சுசீந்திரன் வெள்ளிப் பதக்கமும், ஹிமாஸ்ரீ ராய் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
முன்னதாக, தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் டூட்டி சந்த் 11.48 விநாடிகளில் 100 மீ இலக்கை கடந்து தொடரிலிருந்து வெளியேறினார். தற்போது தேசிய அளவில் அவர் தங்கம் வென்றதால், தோஹாவில் ஏற்பட்ட தோல்வியை சரிசெய்து தனது ஆட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
அதேபோல் நடைபெற்ற ஆடவர்களுக்கான 100 மீ ஓட்டப் பந்தய போட்டியில் அமியா குமார் பந்தய இலக்கை 10.46 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். மலேசியாவைச் சேர்ந்த ஜொனதன் அனக்யேப்பா வெள்ளிப் பதக்கமும் பஞ்சாப் வீரர் குரிந்தர்விர் சிங்கிற்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.