தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாமக்கல் வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் லத்துவாடி அடுத்துள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100, 200, மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட போட்டிகள் நடைப்பெற்றது. இந்நிலையில் இன்று இறுதி போட்டிகள் காலை முதலே நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் நேரடியாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.
இந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில் நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 1200 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'மாவட்ட அளவிலான தடகளபோட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்ச