நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையிலான கேரம் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான போட்டிகள் உதகை, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட மண்டலங்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உதகை மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்று முதல் அண்ணா உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் 37க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த 250 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இப்போட்டிகள் 14,18,19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவில் இருந்தும் ஒற்றையர், இரட்டையர் என போட்டிகள் நடத்தபடுகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான கேரம் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.