வார்ஸா: தீபக் புனியா தனது இடக்கை காயம் மோசமடைவதைத் தவிர்ப்பதற்காக ஒலிம்பிக்கிற்குச் செல்லும் வகையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) போலந்து ஓபனில் இருந்து வெளியேறினார்.
முன்னதாக தீபக் புனியா 86 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்காவின் ஜாஹித் வலென்சியாவுக்கு எதிராக காலிறுதி போட்டியில் வெற்றியை இழந்தார். மேலும் அவர் தனது இடக்கையில் ஏற்பட்டுள்ள காயத்தையும் கவனத்தில் கொண்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபக் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார். அப்போதும் அவர் காயமுற்றிருந்தார். அந்தக் காயத்திலிருந்து பெற்ற பாடத்தின்படி போலந்து ஓபனில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை இந்திய மல்யுத்த கூட்டமைப்பும் (WFI) உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து WFI உதவி செயலாளர் வினோத் டோமர் கூறுகையில், “ஆமாம், நாங்கள் அவருக்கு ஒரு தேர்வு கொடுத்தோம், நாங்கள் மல்யுத்த வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை, ஒலிம்பிக் போட்டிகள் வேறு அருகில் உள்ளன. எனவே ரிஸ்க் எடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார்.
எனினும் போலந்து கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாமுக்கு ஜூலை 5 வரை புனியா அணியுடன் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மல்யுத்தம் பயிற்சிபெற்ற ஐந்தே மாதங்களில் வெள்ளி வென்ற தமிழ்நாடு வீரர்!