டெல்லி: காமன்வெல்த் 2022 தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தியா சார்பாக 36 தடகள வீரர்கள் பங்கேற்க இருந்தனர். இதைத் தொடர்ந்து, உலக தடகள அமைப்பின் தடகள பிரிவு (AIU) வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தியது.
சோதனையின் முடிவுகள் இன்று (ஜூலை 20) வெளியான நிலையில், இந்தியாவின் ட்ரிபிள் ஜம்பரும், தேசிய சாதனையாளருமான ஐஸ்வர்யா பாபு, ஒட்டப்பந்தய வீராங்கனையும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தனலட்சுமி சேகர் இருவரும் தடைசெய்யப்பட்ட மருந்தை உபயோகித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இருவரும் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய தடகள அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தனலட்சுமி, 100 மீட்டர் பிரிவிலும், டூட்டி சந்த், ஹீமா தாஸ், ஸ்ரபானி நந்தா ஆகியோருடன் 4x100 தொடர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்க இருந்தார். கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தனலட்சுமி பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உண்மையான தியாகம்: தடகள வீராங்கனை ஹீமா தாஸ் தனலட்சுமிக்கு ஆறுதல்