நியூயார்க்: அமெரிக்கா ஒபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் (Coco Gauff), பெல்லாரஸை சேர்ந்த 2ம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka) உடன் மோதினர்.
-
Wow, what a day!
— US Open Tennis (@usopen) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We tried to recap it the best we could 😅 pic.twitter.com/fatC7G5t0J
">Wow, what a day!
— US Open Tennis (@usopen) September 10, 2023
We tried to recap it the best we could 😅 pic.twitter.com/fatC7G5t0JWow, what a day!
— US Open Tennis (@usopen) September 10, 2023
We tried to recap it the best we could 😅 pic.twitter.com/fatC7G5t0J
இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் சபலென்கா ஆதிக்கம் செலுத்தினார். மேலும், முதல் செட் முடிவில் 2-6 என்ற கணக்கில் முன்னிலை வகித்த சபலெங்கா அடுத்தடுத்த ஆட்டத்தில் சரிவைக் கண்டார். முதல் செட்டை கோகோ காஃப் இழந்தாலும், அதன் பின் சுதாரித்து கொண்டு கவனமாக விளையாடி, இரண்டாவது செட்டில் 6-3 என்ற கணக்கில் முன்னேறினார். தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு 6-2 என்ற கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி கோகோ காஃப் கிரண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
இதையும் படிங்க: David Warner: சச்சின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீரர்!
இதன் மூலம் 19 வயதான அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தனது முதல் பட்டத்தை வென்றார். மேலும், இளம் வயதில் கிரண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற 10வது வீராங்கனை என்ற பெருமையையும் கோகோ காஃப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் கோகோ காஃப்பிற்கு 25 கோடி ரூபாய் பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது.
இதனிடையில், அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் போட்டியின் இறுதிப் போட்டியில் ரஷிய நாட்டை சேர்ந்த வீரரும் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் டேனியல் மெட்வெடேவ் (daniil medvedev) தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள வீரர் நோவக் ஜோகோவிச்சை (novak djokovic) எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 9 முறை நோவாக் ஜோகோவிச்சும், 5 முறை மெட்வெடேவும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த இறுதிப் போட்டியானது இந்திய நேரப்படி இரவு 1.30 மணிக்கு நடைபெறுகிறது. மேலும், இதுவரை ஜோகோவிச் 23 முறை கிரண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் ஒரே ஒருமுறை மட்டுமே கிரண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: US Open Final: ஜோகோவிச், மெட்வெடேவ் இறுதி போட்டியில் சந்திப்பு!