ETV Bharat / sports

லெஜண்டை பாராட்டிய 'தார்' - அவெஞ்சர்ஸை மிஞ்சினார் தங்க மங்கை - கிறிஸ் ஹெம்ஸ்வோர்த்

ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டுத்தொடர்களில் முறையே வெள்ளி, தங்கம் வென்று அசத்திய அசாத்திய பெண்மணி மீராபாய் சானுவை 'லெஜண்ட்' என 'தார்' திரைப்பட நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பாராட்டியுள்ளார்.

லெஜண்டை பாராட்டிய 'தார்' - அவஞ்சர்ஸை மிஞ்சினார் தங்க மங்கை

author img

By

Published : Aug 5, 2022, 6:13 PM IST

இந்தியாவின் பளு தூக்குதல் வீராங்கனையான மீராபாய் சைக்கோம் சானு, கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட இணையமெங்கும் பாராட்டுகள் குவிந்தன.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், "201 கிலோவை தூக்குவது என்பது எப்போதும் எனக்கு மிக கடினமாகவே இருந்துள்ளது. எனது முயற்சியை பாராட்டும் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன். அனைத்து சவால்களும் நாம் முயற்சித்தால் ஒரு படி தூரத்தில்தான் இருக்கிறது" என்று தங்க மங்கை மீராபாய் சானு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைப்பகிர்ந்த சௌரப் சின்ஹா என்ற ஊடகவியலாளர் அந்த ட்வீட்டை பகிர்ந்து,"தார் தன்னுடைய சுத்தியலை (ஆயுதம்) கைவிடும் நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டு மார்வல் காமிக் கதாபாத்திரமான 'தார்' பட நாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதாவது சக்திவாய்ந்த 'தார்' கதாபாத்திரத்தை, மீராபாய் சைக்கோம் மிஞ்சிவிட்டதாக மறைமுகமாகத்தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரின் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்,"அவர் அதற்கு தகுதியானவர் தான். வாழ்த்துகள் சைக்கோம், நீங்கள் லெஜண்ட்" எனப் பதிவிட்டுள்ளார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் இந்த ட்வீட் தற்போது இணையத்தை சுற்றி வருகிறது.

தற்போது இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில், இந்தியா சார்பில் மீராபாய் சானு பளு தூக்குதல் 49 கிலோ பிரிவில் பங்கேற்றார். ஸ்னாட்ச் முறையில் 90 கிலோ பளுவையும், கிளீன் & ஜெர்க் முறையில் 113 கிலோ பளுவையும் தூக்கி மொத்தம் 201 கிலோவுடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.

லெஜண்டை பாராட்டிய 'தார்' - அவஞ்சர்ஸை மிஞ்சினார் தங்க மங்கை
லெஜண்டை பாராட்டிய 'தார்' - அவெஞ்சர்ஸை மிஞ்சினார் தங்க மங்கை

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் தற்போது, காமன்வெல்த் 2022 விளையாட்டில் இந்தியாவின் முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்தார். மீராபாய் 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும், 2018இல் தங்கமும் வென்றிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: இந்தியாவுக்கு 6ஆவது தங்கம் - நீளம் தாண்டுதலில் வெள்ளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.