ETV Bharat / sports

AIFF President: பைசங் பூட்டியாவை வீழ்த்தினார் கல்யாண் சௌபே... - என்ஏ ஹரிஸ்

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் புதிய தலைவராக கல்யாண் சௌபே தேர்வாகியுள்ளார்.

கல்யாண் சௌபே
கல்யாண் சௌபே
author img

By

Published : Sep 2, 2022, 3:46 PM IST

Updated : Oct 29, 2022, 3:47 PM IST

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தல் 2020ஆம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாத காரணத்தால், கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேலை மே 18ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். டேவ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நிர்வாகக்குழு உச்ச நீதிமன்றம் அமைத்து, கூட்டமைப்பு விவகாரங்களைக் கையாள அவர்களுக்கு அதிகாரமளித்தது. இந்த நிர்வாகக் குழுவின் மேல்பார்வையில் கூட்டமைப்பிற்கான தலைவர் தேர்தலை நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு தேர்தல் இன்று நடத்தப்பட்டது. இதில், தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய கால்பந்து கோல் கீப்பர் கல்யாண் சௌபேவும், முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைசங் பூட்டியாவும் போட்டியிட்டனர். கூட்டமைப்பின் மாநில உறுப்பினர்களின் வாக்கு மொத்தம் 34 ஆகும்.

அதில், 33 வாக்குகளைப் பெற்ற கல்யாண் சௌபே இந்திய கால்பந்து கூட்டமைப்பின் புதிய தலைவராகத் தேர்வாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பைசங் பூட்டியா ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார். துணை தலைவராக என்.ஏ. ஹரிஸ் தேர்வாகியுள்ளார். 86 ஆண்டுக்கால கூட்டமைப்பின் வரலாற்றில், முதல்முறையாக கால்பந்து வீரர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், புதிய செயற்குழு உருவாக்கப்பட்டு கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளும், அதிகாரமும் உச்ச நீதிமன்றம் அமைத்த நிர்வாகக் குழுவிடம் இருந்து செயற்குழுவிற்கு திரும்பும்பட்சத்தில், அகில இந்திய கூட்டமைப்புக்கு ஃபிஃபா விதித்த தடை நீங்கும் என எதிர்பார்க்ப்படுகிறது.

முன்னதாக, நிர்வாகத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடுகள் இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு ஃபிஃபா இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை... ஃபிஃபா அதிரடி

Last Updated : Oct 29, 2022, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.