ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாடு வீராங்கனை தேர்வு

தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வாள்சண்டை வீராங்கனை சி.ஏ. பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதித்துள்ளார்.

Bhavani Devi qualifies for Tokyo 2021, becomes the 1st Indian to achieve the feat

author img

By

Published : Mar 14, 2021, 9:17 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி. இவர் தற்போது, ஹங்கேரியாவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிவருகிறார்.

இப்போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்றதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார்.

இதன் மூலம், இந்தியா சார்பில் வாள்சண்டை பிரிவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிப்பெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

முன்னதாக, பவானி தேவி வாள்சண்டை பிரிவில் எட்டு முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: மே மாதத்தில் புதிய அணிகளுக்கான ஏலம் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.