இந்தோனேஷியா பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் ஜகர்நாடவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் நிஷிமோடாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
அதேபோல், நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பானை சேர்ந்த அயா ஓஹாரியை 11-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்று அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சைராஜ் - சிராக் ஷெட்டி; கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிராநாவ் ஜெரி - சிக்கி ரெட்டி ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆனால், மகளிர் இரட்டையர் பிரிவில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி முதல் சுற்றுலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.