ETV Bharat / sports

மல்யுத்தம்: 27 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் - இந்தியாவுக்கு முதல் தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் கிரேக்கோ ரோமன் பிரிவில், 27 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.

asian wrestling championship, ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், மல்யுத்தம்

author img

By

Published : Feb 19, 2020, 9:41 AM IST

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று டெல்லியில் தொடங்கின. இதில் கிரேக்கோ ரோமன் 87 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட, இந்திய வீரர் சுனில் குமார் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் அஸாமத் குஸ்டுபாயேவை 12-8 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் குமார், கிர்கிஸ்தான் வீரர் அஸதாத் சாலிடினோவை 5-0 என வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் கிரேக்கோ ரோமன் பிரிவில் 27 ஆண்டுகளுக்குப்பின் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை சுனில் குமார் படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 1993ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தொடரில் கிரேக்கோ ரோமன் 48 கிலோ பிரிவில், இந்திய வீரர் பாப்யு யாதவ் தங்கம் வென்றிருந்தார்.

asian wrestling championship, ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், மல்யுத்தம்
சுனில் குமார்

கடந்தாண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் கிரேக்கோ ரோமன் பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்த சுனில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதே போன்று நடப்பு தொடரின் கிரேக்கோ ரோமன் 55 கிலோ பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் ஹலாகுர்கி வெண்கலம் வென்றார்.

இதையும் படிங்க: கேன்சரை வென்ற சிக்சர் மன்னன் யுவராஜின் வெப் சீரிஸ் விரைவில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.