ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வீரர், வீராங்கனைகள் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவர்.
அதன் அடிப்படையில் இந்திய நட்சத்திரங்களான மேரி கோம் (மகளிர் 51 கி.கி), சிம்ரன்ஜித் கவுர் (மகளிர் 60 கி.கி), லவ்லினா (மகளிர் 69 கி.கி), பூஜா ராணி (மகளிர் 75 கி.கி), அமித் பங்கல் (ஆடவர் 51 கி.கி), விகாஸ் கிருஷ்ணன் (ஆடவர் 69 கி.கி), ஆசிஷ் குமார் (ஆடவர் 75 கி.கி), சதீஷ் குமார் (ஆடவர் 91 கி.கி) ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.
-
Final Frontier💪🏻@officialvkyadav pulls off an upset win over
— Boxing Federation (@BFI_official) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
reigning World Championship bronze medallist Ablaikhan Zhussupov of Kazakhstan to pull 3-2 in the semi-final.
Let’s get the gold, Champ!#PunchMeinHaiDum #OlympicQualifiers pic.twitter.com/Rw0qeiW5K3
">Final Frontier💪🏻@officialvkyadav pulls off an upset win over
— Boxing Federation (@BFI_official) March 10, 2020
reigning World Championship bronze medallist Ablaikhan Zhussupov of Kazakhstan to pull 3-2 in the semi-final.
Let’s get the gold, Champ!#PunchMeinHaiDum #OlympicQualifiers pic.twitter.com/Rw0qeiW5K3Final Frontier💪🏻@officialvkyadav pulls off an upset win over
— Boxing Federation (@BFI_official) March 10, 2020
reigning World Championship bronze medallist Ablaikhan Zhussupov of Kazakhstan to pull 3-2 in the semi-final.
Let’s get the gold, Champ!#PunchMeinHaiDum #OlympicQualifiers pic.twitter.com/Rw0qeiW5K3
இதில், விகாஸ் கிருஷ்ணன், சிம்ரன்ஜித் கவுரைத் தவிற மற்ற ஆறு வீரர்களும் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெண்கலம் பெற்றனர். குறிப்பாக, இந்தத் தொடரில் தங்கம் வெல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆறுமுறை உலக சாம்பியனான மேரி கோம், 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் சீன வீராங்கனை யுவான் சங்குடன் போராடி தோல்வியடைந்தார். இதேபோல், உலகின் முதல்நிலை வீரரான அமித் பங்கல் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜியான்குவான் ஹூவிடம் வீழ்ந்தார்.
-
Singh is King!@Simranjitboxer showcased a stellar show as she made a comeback and responded fearlessly to the attacking punches of Shih-Yi Wu of Chinese Taipei to secure a 4-1 win in the semi-final. Let's go for Gold and make this #AsianQualifiers special. 👏 pic.twitter.com/xE0I8d1KFg
— Boxing Federation (@BFI_official) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Singh is King!@Simranjitboxer showcased a stellar show as she made a comeback and responded fearlessly to the attacking punches of Shih-Yi Wu of Chinese Taipei to secure a 4-1 win in the semi-final. Let's go for Gold and make this #AsianQualifiers special. 👏 pic.twitter.com/xE0I8d1KFg
— Boxing Federation (@BFI_official) March 10, 2020Singh is King!@Simranjitboxer showcased a stellar show as she made a comeback and responded fearlessly to the attacking punches of Shih-Yi Wu of Chinese Taipei to secure a 4-1 win in the semi-final. Let's go for Gold and make this #AsianQualifiers special. 👏 pic.twitter.com/xE0I8d1KFg
— Boxing Federation (@BFI_official) March 10, 2020
இதில், ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில் விகாஸ் கிருஷ்ணன் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் அப்லெய்கனை வீழ்த்தி இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஜோர்டனைச் சேர்ந்த ஈஷாய் ஹூசைனுடன் மோதவுள்ளார். அதேபோல், மகளிர் 60 கிலோ எடைப்பிரிவுக்கான அரையிறுதிப் போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் சீனதைபே வீராங்கனை ஷி-யியூவை தோற்கடித்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் ஒ யினான் ஜீவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய விகாஸ் கிருஷ்ணன், சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் தங்கப் பதக்கம் வெல்வர்களா என்ற எதிர்பார்ப்பு குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செஸ் நடுவருக்கானத் தேர்வு எழுத தாய், மகள் இருவருக்கும் அனுமதி மறுப்பு!