ETV Bharat / sports

ஹாட்ரிக் தங்கம் வென்ற அஞ்சும் முட்கில் - மனு பக்கர்

போபாலில் நடைபெற்றுவரும் தேசிய துப்பாக்கிச் சுடுதல் தொடரில்  தொடர்ந்து மூன்றாவது முறையாக மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் பஞ்சாபைச் சேர்ந்த அஞ்சும் முட்கில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Anjum wins
Anjum wins
author img

By

Published : Dec 26, 2019, 6:21 PM IST

Updated : Dec 26, 2019, 7:20 PM IST

63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றுவருகின்றன. இதில், மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3ஆம் பிரிவுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாபைச் சேர்ந்த அஞ்சும் முட்கில் 1,172 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

இதையடுத்து, பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் 449.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம், இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு வீராங்கனை காயத்ரி நித்யானந்தம் 447.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஹரியானாவின் நிஷ்சால் 434.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

Anjum wins
பதக்கங்கள் வென்ற அஞ்சும் முட்கில், காயத்திரி, நிஷ்சால்

இதேபோல நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த அபிஷேக் - யஷ்வினி இணை 16-10 என்ற கணக்கில் மகராஷ்டிராவின் ஹர்ஷாதா நிதாவே - அனிகெட் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

முன்னதாக, மகளிர் ஜூனியர், சினியர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹரியானாவின் நட்சத்திர வீராங்கனை மனு பக்கர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் தங்கம் பெற முயற்சிப்பேன் - மேரி கோம்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/other-sports/anjum-wins-gold-top-shooters-continue-to-dominate-nationals/na20191225232413608

Conclusion:
Last Updated : Dec 26, 2019, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.