ETV Bharat / sports

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதிபெற்ற 15 இந்திய வீரர்கள்

கத்தார்: அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளுக்கு மேலும் மூன்று வீரர்ககள் தேர்வாகியுள்ளனர்.

shooting
author img

By

Published : Nov 11, 2019, 11:53 AM IST

கத்தார் தலைநகர் தோஹாவில் 14ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுவருகின்றனர். மேலும் இந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜஸ்வினி, இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு 12ஆவது நபராக தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் ரைபில் பிரிவில் வெண்கலம் வென்ற இளம் வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 13ஆவது ஆளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார். இதே போன்று ஆடவர் ஸ்கீட் பிரிவில் தங்கம் வென்ற அங்கத் வீர் சிங் பாஜ்வா, வெள்ளி வென்ற மைராஜ் அகமது கான் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

shooting
கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற இந்திய ஜோடிகள்

இதன்மூலம் இந்தியா சார்பில் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்களில் பங்குபெற்றவர்கள் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 11 பேரும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் 12 பேரும் கலந்து கொண்டதே அதிகமாக இருந்தது.

shooting
ஆடவர் ஸ்கீட் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற அங்கத் வீர் சிங் பாஜ்வா மைராஜ், அகமது கான்

ஆசிய துப்பாக்கிச் சுடுதலின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், அபிஷேக் வர்மா இணை தங்கப்பதக்கமும், சவுரப் சவுத்ரி, யசஷ்வினி சிங் தேஸ்வால் இணை வெள்ளியும் வென்று அசத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.