ETV Bharat / sports

மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை - தங்கம் வென்ற தமிழர் வருத்தம்! - பாரா பிரிவு ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டி

தஞ்சாவூர்: இந்திய பிரதமர், தமிழக முதல்வர் பாராட்டுக்காக காத்திருக்கின்றேன், ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாதது வருத்தமளிக்கிறது என உலக ராணுவ தடகள போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற ஆனந்தன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

gold medalist at World Military Games
author img

By

Published : Nov 4, 2019, 10:15 PM IST

சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7-வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகளப் போட்டிகள் கடந்த அக்.17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந்தன் பங்கேற்று 100மீ, 200மீ, 400மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்காக மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பதக்கம் வென்ற ஆனந்தன், தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வந்தபோது அவருக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அங்குள்ள காந்தி சிலைக்கு ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக வாகனத்தில் அழைத்து வந்து, அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான க.அன்பழகன், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், முன்னாள் ராணுவத்தினர், நண்பர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்தன், சீனாவில் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களுக்கான உலக அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் 144 நாடுகளிலுள்ள மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பாரா பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் பெற்றுள்ளேன். பாரா பிரிவு ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் முதன் முறையாக நான் பெற்றுள்ளேன். இதனால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளேன் எனக்கூறினார்.

உலக ராணுவ விளையாட்டில் மூன்று தங்கம் வென்ற ஆனந்தன்

மேலும் அவர், உலக அளவில் வெற்றி பெற்றாலும், இந்திய பிரதமர், தமிழக முதல்வர் பாராட்டுக்காக காத்திருக்கின்றேன். ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது. 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் என்னுடைய அடுத்த இலக்கு எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை படைத்தது இந்தியர்தான்!

Intro:தஞ்சாவூர் நவ 04

இந்திய பிரதமர், தமிழக முதல்வர் பாராட்டுக்காக காத்திருக்கின்றேன். ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாதது வருத்தமளிக்கிறது.உலக ராணுவ தடகள போட்டியில் பாரா பிரிவில் மூன்று தங்க பதக்கங்களை பெற்ற ராணுவ உருக்கம்Body:

உலக ராணுவ தடகள போட்டியில் பாரா பிரிவில் மூன்று தங்க பதக்கங்களை பெற்ற ராணுவ வீரருக்கு சொந்த ஊரான கும்பகோணத்தில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயா. கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் ஆனந்தன் (32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ஆனந்தன் கடந்த 2005 -ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2008-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பிரிவில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடி வெடித்ததில், இடது கால் துண்டிக்கப்பட்டார்.
பின்னர் இடது காலுக்கு செயற்கையாக பிளேடுகால் பொருத்தப்பட்டது. அதனைக் கொண்டு நடைப்பயிற்சியையும், வேகமாக ஓடும் பயிற்சியையும் மேற்கொண்டார்.
பின்னர், சிறிய வயது முதல் தடகளப் போட்டியில் ஓடி விளையாடிய ஆர்வத்தை கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சியகத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.
தற்போது சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7-வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகளப் போட்டிகள் கடந்த அக்.17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் ஊனமுற்றோர் பங்கேற்கும் பாரா பிரிவில் ஆனந்தன் பங்கேற்று 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடத்தை பெற்று மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றார்.
இந்நிலையில் தங்க பதக்கம் பெற்ற ஆனந்தன், சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வந்தார். அங்குள்ள காந்தி சிலைக்கு ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயிலிருந்து ஊர்வலமாக வாகனத்தில் அழைத்து வந்து, அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், கும்பகோணம் எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகன், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், முன்னாள் ராணுவத்தினர், நண்பர்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 2020 -ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது தான் என்னுடைய அடுத்த இலக்கு, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று, உலக அளவில் நமது தேசியகொடிக்கு பெருமை சேர்ப்பேன்.
சீனாவில், மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களுக்கான உலக அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் 144 நாடுகளிலுள்ள மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பாரா பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் பெற்றுள்ளேன். பாரா பிரிவு ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டியில் மூன்று தங்கபதக்கம் முதன் முறையாக நான் பெற்றுள்ளேன். இதனால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளேன்.
உலக அளவில் வெற்றி பெற்றாலும், இந்திய பிரதமர், தமிழக முதல்வர் பாராட்டுக்காக காத்திருக்கின்றேன். ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாதது வருத்தமளிக்கிறது. எனக்கு வேண்டிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.