உலகின் நட்சத்திர கூட்டைப்பந்து விளையாட்டு வீரராக வளம்வந்தவர் லாக்கர்ஸ் அணியின் கோப் பிரைன்ட். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மகள் ஜியானாவும் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பிரைன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா பிரைன்ட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.
இந்தத் தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், அமெரிக்க அதிபர், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துவந்த நிலையில், இன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இன்று நாங்கள் மீட்டுள்ளோம். நாங்கள் கைப்பற்றிய உடல்களில் கோப் பிரைன்ட், ஜீயானா பிரைன்ட், ஜான் ஆல்டோபெல்லி, சாரா ஷெஸ்டர், ஆரா ஸோபே எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தர்களின் மீதமுள்ள உடல்களை ஆய்விற்காக அணுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் என்.டி.எஸ்.பி. உறுப்பினர் ஜெனிஃபர் ஹோமண்டி கூறுகையில், விசாரணையின் ஒரு பகுதியாக அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (என்.டி.எஸ்.பி.) பைலட் பதிவுகள், வானிலை தகவல்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத் தொடர்பு, சிதைவுகள் ஆகியவை குறித்து கவனித்துவருவதாகவும், ஹெலிகாப்டரிலிருந்த கறுப்புப் பெட்டியையும் தேடிவருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3ஆவது டி20: சாதனைப் படைக்க காத்திருக்கும் இந்தியா: தோல்வியை சரிகட்டும் முயற்சியில் நியூசி.!