கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் நீடித்துவந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, ஒருவழியாக அதன் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை தேர்தல் அலுவலர்களின் முன்னிலையில், இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் நடத்தியது.
அதன்படி தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் ஃபெடரேஷன் தலைவராக சுதிர் மிட்டல், துணை தலைவர்களாக பிரபாகர், திக்விஜய் சிங், கிரண்வாட்டாள் மற்றும் பிரபு ஆகியோரும் பொதுச்செயலாளராக சாந்திகுமார் சிங், இணைச் செயலர்களாக அனில் மிஷ்ரா, மனோஜ்குமார், சுப்பாராவ், உஜ்ஜல்பருவா ஆகியோரும், பொருளாளராக கவுசிக் பிடிவாலாவும், செயற்குழு உறுப்பினர்களாக சம்ஸ்வர், குணசேகரன், ரனோதே மற்றும் பரமேஸ்வர் பிராபட் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டென்னிஸ்: ஜோகோவிச்சை அடிக்க ஃபெடரருக்கு வாய்ப்பு