ETV Bharat / sports

சிலம்பாட்டப் போட்டியில் 24 தமிழ்நாடு வீரர்களுக்கு தங்கம்! - silambattam

கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றவர்கள்
author img

By

Published : Jun 16, 2019, 11:05 PM IST

கோவாவில் கடந்த ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்பாட்டப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் 26 பேர் கலந்துகொண்டனர். இதில் 24 பேர் தங்கப் பதக்கங்களையும், இருவர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அசத்தினர். இதில் வெற்றி பெற்றவர்கள் ஆகஸ்ட் மாதம் துபாயில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய பயிற்சியாளர்கள் வேல்முருகன், விஜயகுமார்

இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தேசிய பயிற்சியாளர்கள் வேல்முருகன், விஜயகுமார் கூறுகையில், "சிலம்பம் என்பது அடிதடி போட்டி என்பதை மாற்றும் வகையில் பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிலம்பப் போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பயிற்சி அளித்த சிலம்பக்கலை என்பது நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும். அந்த கலையை வளர்க்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது கலையை வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டுள்ளனர்" என்று கூறினர்.

மேலும், "தமிழ்நாடு பள்ளிகளில் சிலம்பாட்டத்தை கட்டாய பாடமாகக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால் சிலம்பாட்ட போட்டிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும். இதன் மூலம் தமிழ்நாடு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கான முயற்சியில் தமிழக சிலம்பாட்ட சங்கம் ஈடுபட்டு வருகிறது" என்றனர்.

Intro:கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 24 வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

Body:திருச்சி;
கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 24 வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தேசிய பயிற்சியாளர்களும், முருகையா சிலம்ப கூட பயிற்சியாளர்களுமான வேல்முருகன், விஜயகுமார் ஆகியோர் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
திருச்சியில் உள்ள முருகையா சிலம்ப கூடத்தில் மருத்துவத்துடன் கூடிய போர்க்கலை கற்றுத்தரப்படுகிறது. இதில் 100 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். சிலம்பம் என்பது அடிதடி போட்டி என்பதை மாற்றும் வகையில் பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிலம்பப் போட்டி தற்போது நடத்தப்பட்டு வருகிறது. கோவாவில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 10, 11ம் தேதிகளில் நடந்தது. இதில் குத்துச்சண்டை, கராத்தே, குங்பூ, டென்னிஸ், கிரிக்கெட் உள்பட பல போட்டிகள் நடந்தது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 250 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழகம் வென்றது. கிரிக்கெட் போட்டியிலும் தமிழக அணி வெற்றி பெற்றது. இதில் சிலம்பாட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 26 பேர் கலந்து கொண்டனர். இதில் 24 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். இரண்டு பேர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகஸ்ட் மாதம் துபாயில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பயிற்சி அளித்த சிலம்பக்கலை என்பது நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும். அந்த கலையை வளர்க்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது கலையை வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டுள்ளனர். தமிழக பள்ளிகளில் சிலம்பாட்டத்தை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால் சிலம்பாட்ட போட்டிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும். இதன் மூலம் தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கான முயற்சியில் தமிழக சிலம்பாட்ட சங்கம் ஈடுபட்டு வருகிறது என்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.