ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகாவில் 11ஆவது தேசிய மகளிர் சப் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச்.12) நடைபெற்ற போட்டியில் ஹரியானா அணி, உத்தரகாண்ட் அணியுடன் மோதியது.
பரபரப்பான இப்போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரியானா அணி, கோல் மழையைப் பொழிந்தது. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ஹரியானா அணி 19-0 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பிகார், சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட்: டக்வொர்த் லூயிஸ் முறையில் தென்ஆப்பிரிக்கா வெற்றி!