இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் முன்னணி வீரராக, திகழ்பவர், கோல்கீப்பர் பி. ஆர். ஸ்ரீஜேஷ். 2006ஆம் ஆண்டு முதல் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரது சிறப்பான ஆட்டத்திறனால், இந்திய அணியின் கேப்டனாகவும் 2016- 2018 வரை செயல்பட்டார். இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடர்களிலும், மூன்று ஆசிய போட்டிகளிலும், இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் பங்கேற்று சிறப்பாக விளையாடியுள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்திறனை பாராட்டும் விதமாக, மத்திய அரசு இவருக்கு 2015இல் அர்ஜுனா விருதும், 2017இல் பத்ம ஸ்ரீ விருதும் அளித்து கௌரவித்தது.
இந்நிலையில், இவருக்கு விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்க, ஹாக்கி இந்தியா அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல், அர்ஜுனா விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் சிங்லன்சானா சிங், ஆகாஷ்தீப் சிங், வீராங்கனை தீபிகா தாகூர் ஆகியோரது பெயரையும் ஹாக்கி இந்தியா அமைப்பு பரிந்துரைத்துள்ளது.