பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியலாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் அம்ரிக் சிங், தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்தார் அதேபோல் இவரது சக நண்பரான சிம்ரன்ஜித் சிங் பஞ்சாப் அணிக்காக வாலிபால் போட்டிகளில் விளையாடிவந்தார். இருவரும் பட்டியாலாவில் உள்ள பஞ்சாப் மாநில மின்நிலையத்தில் (Punjab State Power Corporation Ltd) பணிபுரிந்துவந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு அம்ரிக் சிங், சிம்ரன்ஜித் சிங், மனோஜ் குமார் உள்பட சக வீரர்கள் ஐந்து பேர் பர்தாப் நகரில் உள்ள தாபா உணவத்துக்கு மது அருந்தச் சென்றுள்ளனர். அப்போது நடந்த தகராறில் அம்ரிக் சிங், சிம்ரன்ஜித் சிங் இருவரும் மனோஜ் குமார் மற்றும் அவரது மகனை மூர்க்கமாக தாக்கியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த மனோஜ் குமார் வீட்டுக்குச் சென்று தனது துப்பாக்கியை எடுத்துவந்து அம்ரிக் சிங், சிம்ரன்ஜித் சிங் இருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமிரிந்தர் சிங்கின் சொந்த ஊரில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திடீர் பயங்கர சத்தம்... கண்விழித்துப் பார்த்தால் ரத்த வெள்ளம்' - விபத்தில் நடந்தது என்ன?