ETV Bharat / sports

"தீப்பெட்டி தொழிலாளி மகன் டூ இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்" - இந்திய ஹாக்கி அணி

தூத்துக்குடி: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் குறித்த சிறப்பு தொகுப்பு.

matchbox-worker-son-to-indian-junior-hockey-player

author img

By

Published : Oct 24, 2020, 7:59 PM IST

Updated : Oct 29, 2020, 4:34 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி என்று சொன்னதும் அனைவருக்கும் நம் நினைவில் நிற்பது நாவில் தேன் மதுர சுவை ஊற செய்யும் கடலை மிட்டாய் தான். ஆனால் கோவில்பட்டிக்கு ஹாக்கி பட்டி என்று மற்றொரு பெயரும் உண்டு. நூறு ஆண்டுகளை கடந்து காலம் காலமாக ஹாக்கியை விருப்ப விளையாட்டாக கோவில்பட்டி, பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், வடக்கு திட்டங்குளம், ஏனைய பிற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.

கடந்த 1990ஆம் ஆண்டுகளிலேயே அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டியில் நடந்துள்ளன. அதன் பிறகு தேசிய அளவிலான வீரர்கள் வருகை குறைவு, போட்டி நடத்துவதற்கான செலவு, போதிய வசதியின்மை உள்ளிட்ட காரணத்தால் ஹாக்கி போட்டி நடத்துவது கைவிடப்பட்டது. ஆனால் இளைஞர்களிடையே ஹாக்கி ஆர்வம் மட்டும் குறையாமல் காலாகாலத்திற்கும் கடத்தி வரப்பட்டது.

பயிற்சியின் போது மாரீஸ்வரன்
பயிற்சியின் போது மாரீஸ்வரன்

கோவில்பட்டி, அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஹாக்கி விளையாட்டை பிரதான பொழுது போக்காக விளையாடும் பொருட்டு, ஊருக்கு வெளிப்புறமாக உள்ள கண்மாய்கள், குளம், குட்டை வறண்ட நிலம் உள்ளிட்டவைகளை சமன்படுத்தி ஹாக்கி மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். புழுதிக் காட்டில் மண் தரையில் அனல் பறக்கும் ஹாக்கி விளையாட்டை தற்போதும் கோவில்பட்டியில் நாம் பார்க்க முடியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கோவில்பட்டியில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு செய்து அனுப்பபட்டிருப்பதும், அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடத்தியதும் கோவில்பட்டி இளைஞர்களுக்கு ஹாக்கி மீதான ஆர்வத்தை விளக்குவதற்கான சான்றுகளில் ஒன்று. களிமண் தரையில் சூடு பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, தூள் கிளப்பிய கோவில்பட்டி ஹாக்கி வீரர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் போது அதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடிவதில்லை.

மாரீஸ்வரன்
மாரீஸ்வரன்

ஏனெனில் களிமண் தரையில் ஹாக்கி பழகி பயிற்சி எடுத்துக்கொண்ட வீரர்களுக்கு சர்வதேச அளவிலான போட்டியில் செயற்கை புல் வெளி மைதானத்தில் விளையாட நேரிடும் பொழுது மைதானத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் வேகத்துடன் செயல்படுவதில் சுணக்கம் இருந்து வந்தது. இதை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவில்பட்டியில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி மைதானம் அமைக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் பயனாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால், கோவில்பட்டியில் சர்வதேச அளவில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து 7 கோடி ரூபாய் செலவில் உயர் தரத்துடன் சர்வதேச அளவில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் ஹாக்கி நாயகன்
தமிழ்நாட்டின் ஹாக்கி நாயகன்

ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்த இது, அவர்களின் சர்வதேச கனவுக்கும் அடித்தளமிட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் 30 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவச கல்வியுடன் கூடிய விளையாட்டு பயிற்சியினை அரசு வழங்கி வந்தது.

அதன் பயனாக இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஹாக்கி விளையாட்டு வீரர்கள் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்கு பெங்களூருக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன், அரியலூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதான விளையாட்டு விடுதியில் தங்கியிருந்து ஒன்றாக பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் ஆவர்.

தனது குடும்பத்தினருடன் மாரீஸ்வரன்
தனது குடும்பத்தினருடன் மாரீஸ்வரன்

பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த இவர்களது ஆட்டம், தேசிய அளவில் அசாமில் நடந்த போட்டியிலும் தடம் பதித்தது. இதையடுத்து இன்று மாரீஸ்வரனும், கார்த்திக்கும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆர்.சி தெருவை சேர்ந்தவர்கள் சக்திவேல்-சங்கரி தம்பதியினர். கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மூத்த மகன் மாரீஸ்வரன். கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

மாரீஸ்வரனுக்கு சிறுவயது முதலே ஹாக்கி விளையாட்டு மீது ஆர்வம் இருந்துள்ளது. ஹாக்கி விளையாட அனுமதி கேட்டு பெற்றோரிடம் கூறியதற்கு ஹாக்கி விளையாடும் அளவுக்கு நமக்கு பொருளாதார சூழல் இல்லை என மாரீஸ்வரனின் ஹாக்கி ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் அவரது தந்தை சக்திவேல்.

ஆனாலும் ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பாத மாரீஸ்வரன், உறுதியாக ஹாக்கி விளையாடியே தீருவேன் என பெற்றோரிடம் கூறவும் மகனின் வற்புறுத்தலின் பேரில் ஹாக்கி விளையாட அனுமதித்துள்ளனர். ஆரம்பத்தில் பொருளாதார பின்னணி பயத்துடன் ஹாக்கி விளையாட அனுமதித்த சக்திவேல், தொடர்ந்து வந்த காலங்களில் மகனின் விளையாடும் திறமையைக் கண்டு வியந்துள்ளார்.

அதன்பிறகு தாமாகவே முன்வந்து மாரீஸ்வரனுக்கு ஹாக்கி விளையாட தேவையான பொருள்களை வாங்கித் தர ஆரம்பித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவிலான போட்டிகளின் போது மாரீஸ்வரனுக்கு உறுதுணையாக இருந்து அவருக்கு உத்வேகம் அளித்து போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளார். பொருளாதார ரீதியாக ஹாக்கி விளையாட்டுக்குத் தேவையான பணத்தை சக்திவேலால் தர முடியாத பட்சத்தில், மாரீஸ்வரனுக்கு தேவையான பண உதவிகளை அவருடைய சித்தப்பா செய்து வந்துள்ளார்.

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு மாரீஸ்வரன் தேர்வு செய்யப்பட்டிருப்பது, அவர்களின் குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரீஸ்வரனின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், உறவினர்கள், ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அசோசியேசன் சங்க செயலாளர் குரு சித்திரபாரதி, தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் தலைவர் சேகர் மனோகரன், தமிழ்நாடு அரசுக்கும், மாரீஸ்வரன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தீப்பெட்டி தொழிலாளி மகன் டூ இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மாரீஸ்வரன் நம்மிடையே பேசுகையில், இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இதனால் எனது விளையாட்டு ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் ஹாக்கிக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு கூட எனக்கு சிரமம் இருந்து வந்தது.

ஆனாலும் எனது விளையாட்டு ஆர்வத்துக்கு தடை ஏற்படாதவாறு தேவையான பொருட்களை எனது தந்தை சிரமப்பட்டேனும் வாங்கித் தந்தார். தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஹாக்கி போட்டியில் பங்கு பெற்று இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் பெற்று தருவதே எனது குறிக்கோள். இதுவே எனது பெற்றோரின் ஆசையும் கூட. நிச்சயமாக அதை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.

மாரீஸ்வரனின் கனவும், ஆசையும் நிறைவேற நம்முடைய வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.

இதையும் படிங்க: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழ்நாடு வீரர்கள்!

Last Updated : Oct 29, 2020, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.