இந்திய மகளிர் ஹாக்கி அணியின் டிஃபெண்டிங்கில் தூணாக திகழ்பவர் ஒடிசாவைச் சேர்ந்த சுனிதா லக்ரா. இவர் தனது சிறப்பான டிஃபெண்டிங்கால் எதிரணிகளை கோல் அடிக்க முடியாதவாறு தடுத்துள்ளார். 2008இல் சர்வதேச ஹாக்கி போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை இந்திய அணிக்காக 139 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
![Sunita Lakra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5569713_h.jpg)
அதில், 2018இல் நடந்த மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவரது தலைமையிலான இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியது. அதுமட்டுமின்றி, 2014இல் ஆசிய போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல இவரது பங்களிப்பும் முக்கிய காரணம். இந்தாண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், காயம் காரணமாக சர்வதேச ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
-
☑ Asian Games
— Hockey India (@TheHockeyIndia) January 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
☑ Olympics
☑ World Cup
Seen it all, done it all. 👏🙌
Thank you for everything, Sunita. We wish you a happy retirement.
Read more: https://t.co/1poxirk0S5#IndiaKaGame @IndiaSports @CMO_Odisha @sports_odisha @Media_SAI @FIH_Hockey pic.twitter.com/hnrDGXt7iV
">☑ Asian Games
— Hockey India (@TheHockeyIndia) January 2, 2020
☑ Olympics
☑ World Cup
Seen it all, done it all. 👏🙌
Thank you for everything, Sunita. We wish you a happy retirement.
Read more: https://t.co/1poxirk0S5#IndiaKaGame @IndiaSports @CMO_Odisha @sports_odisha @Media_SAI @FIH_Hockey pic.twitter.com/hnrDGXt7iV☑ Asian Games
— Hockey India (@TheHockeyIndia) January 2, 2020
☑ Olympics
☑ World Cup
Seen it all, done it all. 👏🙌
Thank you for everything, Sunita. We wish you a happy retirement.
Read more: https://t.co/1poxirk0S5#IndiaKaGame @IndiaSports @CMO_Odisha @sports_odisha @Media_SAI @FIH_Hockey pic.twitter.com/hnrDGXt7iV
"சர்வதேச ஹாக்கியிலிருந்து ஓய்வை அறிவித்த இந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாள். 2016ஆம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்கில் விளையாடியது எனக்கு கிடைத்த பெருமை. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி அந்தத் தொடரில்தான் விளையாடியது. டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகும் இந்திய அணியில் நான் இடம்பெற வேண்டும் என்றிருந்த எனது கனவு காயத்தால் தகர்ந்துள்ளது.
எனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர். ஆனால், இந்த காயத்திலிருந்து பூரண குணமடைய எத்தனை நாட்கள் ஆகும் என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து மீண்டுவந்த பின் நான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன்.
![Sunita Lakra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5569713_po.jpg)
எனது கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் எனக்கு எப்போதும் நல்ல ஆதரவைத் தந்துள்ளனர். அவர்களது ஊக்கம் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன். எனக்கு ஏற்பட்ட காயத்தின் போது எனக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்த, ஹாக்கி இந்தியாவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்"என்றார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: நியூசிலாந்துடன் கணக்கைத் தொடங்கும் இந்தியா!