ETV Bharat / sports

ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் இந்தியா! - இந்திய ஆடவர் ஹாக்கி அணி

கரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

India men's hockey team to travel to Europe on Sunday

author img

By

Published : Feb 20, 2021, 11:00 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு அமைச்சக பயிற்சி மையத்தில் இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டது.

இதனையடுத்து வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்காக ஆடவர் ஹாக்கி அணி நாளை(பிப்.21) பெங்களூருவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லவுள்ளது.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே: இஷான் கிஷானின் ருத்ரதாண்டவத்தால் இமாலய வெற்றி பெற்ற ஜார்கண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.