ஆஸ்திரேலிய காட்டுத்தியினால் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கோடிக்கணக்கான விலங்குகள் தீக்கிரையாகியுள்ளன. இந்தக் காட்டுத்தீ பாதிப்புக்கு ஆஸ்திரேலியாவில் பலரும் நிவாரணம் திரட்டி வரும் நிலையில், இந்திய ஹாக்கி சம்மேளனம் 25 ஆயிரம் டாலர்களை நிவாரண உதவியாக வழங்கியுள்ளது. அதனோடு சேர்த்து இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியும் அனுப்பப்பட்டடுள்ளது.
இதுகுறித்து ஹாக்கி ஆஸ்திரேலியா, '' ஆஸ்திரேலிய காட்டுத்தீ பாதிப்புக்கு பலரும் நிவாரணம் திரட்டிவருகிறோம். பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அனைத்து தரப்பினரும் உதவி செய்துவருகின்றனர். இந்த நேரத்தில் எங்களுக்கும், எங்கள் மக்களுக்கும் உதவி செய்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களது அன்பும், பரிவும் எங்களிடம் வந்துசேர்ந்தது. இந்த உதவியால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்றிலேயே வெளியேறிய குணேஸ்வரன்!