டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடும் இந்திய ஹாக்கி அணிகளுக்கு ஹாக்கி முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடும் இந்திய ஹாக்கி அணிகள் குறித்து முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை அளித்த பேட்டியில், “நான் உறுதியாக நம்புகிறேன். ஒலிம்பிக்கில் இம்முறை பதக்க வறட்சி முடிவுக்கு வரும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நாம் பொருத்தமான அணியை தேர்வு செய்து அனுப்பியுள்ளோம். அவர்கள் உடலளவில் ஸ்திரமாக உள்ளது. இது நல்ல தருணம், ஏனெனில் உடல்தகுதி மட்டுமே சொத்து.
இந்திய ஹாக்கி வீரர்கள் பதக்கம் வெல்வார்கள். கடந்த காலங்களில் நமது வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபி (2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு) மற்றும் உலக லீக் இறுதிப் போட்டிகளில் (2015, 2017) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க நினைத்திருந்தேன். கோவிட் வழிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை.
நான் உறுதியாக சொல்கிறேன், இது சரியான நேரம். நமது வீரர்கள் கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒலிம்பிக்கிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்வார்கள்” என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி அணிக்கு மன்ப்ரீத் சிங் தலைமை தாங்குகிறார். போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்குகின்றன.
இதையும் படிங்க : ஹாக்கியின் புனித நகரம்!