ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வரில் உள்ள கலிங்க மைதானத்தில் எஃப்.ஐ.எச். சீரிஸ் பைனல்ஸ் ஹாக்கி தொடர் நடைபெற்றுவருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரின் இரண்டு அறையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறவிருக்கிறது. இத்தொடரின் இறுதிப் போட்டியை எட்டும் அணிகள் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெறும்.
முதல் அரையிறுதிப்போட்டியில் தரவரிசையில் 25ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க அணி 16ஆவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவை இன்று (ஜூன் 14) மாலை 5 மணிக்கு எதிர்கொள்கிறது. அமெரிக்கா இதுவரை தான் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றியும் ஒன்றில் டிராவுடனும் பி பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதேபோல் இன்று இரவு 7.15 மணிக்கு மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஐந்தாவது இடத்திலுள்ள இந்தியாவை 18ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் எதிர்கொள்கிறது. இந்தியா தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று காலை எட்டு மணிக்கு ஐந்து, ஆறாவது இடத்தை முடிவு செய்யும் போட்டியில் ரஷ்யாவை எதிர்கொள்கிறது போலந்து.