ETV Bharat / sports

'கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் புதிய முயற்சியில் இங்கிலாந்து ஹாக்கி அணி'

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றிவரும் தேசிய சுகாதார சேவை மையத்திற்கு(என்.ஹெச்.எஸ்) நிதி திரட்டும் முயற்சியாக இங்கிலாந்தின் மகளிர் அண்டர்-16 ஹாக்கி அணியைச் சேர்ந்த வீராங்கனைகள், 2,070 மைல்கள் ஓடி, பெல்ஜியம், ஸ்காட்லாந்து, ஜெர்மனி ஆகிய அணிகளுடன் போட்டியிட்டு நிதி திரட்ட இருப்பதாக இங்கிலாந்து ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

author img

By

Published : Apr 19, 2020, 12:42 PM IST

England women hockey team to run for COVID-19 relief fund

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் ஊள்ளனர். இப்பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இப்பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆறாம் இடத்திலிருக்கும் இங்கிலாந்து நாட்டில், இதுவரை ஒரு லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனையடுத்து இப்பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையத்திற்கு நிதி திரட்டும் முயற்சியாக, இங்கிலாந்தின் மகளிர் அண்டர்-16 அணியைச் சேர்ந்த வீரராங்கனைகள், பெல்ஜியம், ஸ்காட்லாந்து, ஜெர்மனி ஆகிய அணிகளுடனான கோடைக்கால ஹாக்கி போட்டிகளுக்கு, 2,070 மைல்கள் ஓடிச் சென்று நிதி திரட்டும் முயற்சியில் இறங்கிவுள்ளதாக இங்கிலாந்து ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து ஹாக்கி கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், “இங்கிலாந்து மகளிர் அண்டர்-16 ஹாக்கி அணியைச் சேர்ந்த வீராங்கனைகள், கோடை காலத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக 2,072 மைல்கள் ஓடி நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளது.

இதன் மூலம் இவர்கள் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையத்திற்காக இந்த நிதியை வழங்கவுள்ளனர். மேலும் என்.ஹெச்.எஸ் இதனை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்காகவும், அவர்களது ஊழியர்களை முடிந்தளவு பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவும், மாற்று மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் இந்த நிதி பயன்படும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி: அனைத்து வகை கால்பந்து தொடர்களையும் கைவிட்ட ஏ.ஐ.எஃப்.எஃப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.