ETV Bharat / sports

நிஜத்தில் வாழும் 'பிகில்' கோச் அருள்ராஜு! - தமிழ்நாடு அரசு மேம்பாட்டு ஆணையம் நடத்திவரும் முதலமைச்சர் கோப்பை

ஈரோடு: அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரான அருள்ராஜு ஹாக்கி விளையாட்டில் தங்களது பள்ளி மாணவிகளை தொடர்ச்சியாக ஐந்து முறை தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பையை வென்று சாதனைப் படைக்க வைத்துள்ளார்.

the Bigil living in real life
author img

By

Published : Nov 5, 2019, 8:20 AM IST

புன்செய் புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில் கிராமப்புறத்தில் அமைந்துள்ளது புன்செய் புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் பயிலுகின்றனர். இந்த கிராமப்புற வட்டாரத்தில் விவசாய கூலித்தொழிலாளர்களே அதிகளவில் வசித்துவருகின்றனர்.

விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தில் தங்களது பிள்ளைகளை படிக்கவைத்துவரும் இக்கிராமத்தினர், தங்களது பிள்ளைகளை தேசிய விளையாட்டான ஹாக்கிப் போட்டியிலும் சாதனை படைக்க வைத்துள்ளனர்.

மாணவிகளின் சாதனைகளுக்குப் பின்னால் கோச் அருள்ராஜு

மாணவிகள் சாதிக்க பெற்றோர் ஒருபக்கம் துணை நிற்க, அவர்களைத் தாண்டி மாணவிகள் சாதனைப்படைக்க பெரும் பங்காற்றியவர் பள்ளியின் பயிற்சியாளர். கடந்த 17 ஆண்டுகளாக மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வித் துறை ஆசிரியராக கே. அருள்ராஜு பணியாற்றிவருகிறார்.

ஹாக்கி விளையாட்டில் ஆர்வம்கொண்ட அருள்ராஜு, இங்குள்ள மாணவிகளை இந்தியாவுக்காக ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளித்துவருகிறார். வறுமை, பொருளாதாரத்தில் பின்தங்கிய இப்பள்ளி மாணவிகள் விளையாட்டு மூலம் பொருளாதார ரீதியாக வாழ்க்கையை உயர்த்த முடியும் என்ற நோக்கிலும் அவர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.

தொடர்ந்து வெற்றித்தடம் பதித்துவரும் மாணவிகள்

ஹாக்கி விளையாட்டில் முக்கிய யுக்திகளான கோல் அடிப்பது, பந்தைத் தடுப்பது போன்ற நுட்பங்களை மாணவிகளுக்கு திறம்பட கற்றுக்கொடுக்கிறார். தினந்தோறும் இதற்காக மாலை நேரத்தில் மாணவிகளுக்காக நேரம் ஒதுக்கி ஹாக்கியில் சிறந்த வீராங்கனைகளை உருவாக்கிவருகிறார் அருள்ராஜு. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜூனியர் ஹாக்கி அணி இருந்த போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மேம்பாட்டு ஆணையம் நடத்திவரும் முதலமைச்சர் கோப்பையை இப்பள்ளி மாணவிகளே தொடர்ந்து ஐந்து முறை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

மேலும், இப்போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசும் கிடைத்துள்ளது. இப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்று தற்போது கல்லூரியில் படிக்கும் ரூபாஸ்ரீ, தற்போது தமிழ்நாடு ஹாக்கி அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் இந்தியன் கேம்ப் எனப்படும் தேசிய அளவிலான அணிக்குச் சென்றுள்ள 32 மாணவிகளில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிஜத்தில் வாழும் 'பிகில்' அருள்ராஜூ

திறமைக்கு வறுமை தடையில்லை... உயர் சிந்தனையோடு வழிநடத்தும் கோச்

மேலும் தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் 14, 17, 19 வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கி அணியில் தங்களது பள்ளி வீராங்கனைகளை சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் அருள்ராஜு. மேலும் இவர் தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி போட்டிக்கு தங்களது பள்ளி மாணவிகளையும் தயார்படுத்திவருகிறார்.

மாணவிகளின் திறமைக்கு வறுமை தடையில்லை என்றும் விளையாட்டுத் துறையிலும் பொருளாதார ரீதியாகவும் மாணவிகளை உயர்த்த முடியும் எனவும் தனது வாழ்நாளில் ஒரு மாணவியாவது இந்திய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு அதனை செயல்படுத்திவரும் அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருள்ராஜுக்கு வாழ்த்துகள்.

இதையும் படிங்க: WTA finals: முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஆஷ்லே!

Intro:செய்தி தொடர்பான பைல் நேம்
tn-_erd_03_sathy_hockey_sports-_vis_tn10009
பேட்டி:
பயிற்சியாளர் அருள்ராஜூ மற்றும் மாணவி ரூபாஸ்ரீ

tn-_erd_03a_sathy_hockey_sports-_byte_rupasri_tn10009
tn-_erd_03b_sathy_hockey_sports-_byte_arulraj_tn10009
Body:தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்று புன்செய் புளியம்பட்டி அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை

5 முறை முதல்வர் விருது பெற்று தந்த அரசுப்பள்ளி பயிற்சியாளர் அருள்ராஜ்

ஈரோடு மாவட்டம், கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் கிராமப்புறத்தில் அமைந்துள்ளது புன்செய் புளியம்பட்டி கெ.ஓ.ம அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் பயிலுகின்றனர். புன்செய் புளியம்பட்டி வட்டாரத்தில் மானாவாரி சாகுபடியை நம்பியுள்ளதால் சிறு குறு விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். விவசாயத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் படித்து வரும் புன்செய் புளியம்பட்டி கெ.ஓ.ம அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். கடந்த 17 வருடங்களாக விளையாட்டு ஆசிரியராக கே.அருள்ராஜூ பணியாற்றி வருகிறார். ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட அருள்ராஜூ, இங்குள்ள மாணவிகளை இந்தியாவுக்கான போட்டியில் பங்கேற்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு கிராமப்புற மாணவிகளை ஹாக்கி பயிற்சி அளித்து ஊக்கமளித்தார். வறுமை, பொருளாதாரத்தில் பின்தங்கிய இப்பள்ளி மாணவிகள் விளையாட்டு மூலம் பொருளாதார ரீதியாக வாழ்க்கையை உயர்த்து முடியும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ஹாக்கி பயிற்சி அளித்தார். ஹாக்கியில் எதிரணியை வீழ்வது கோல் போடுவது பந்தைத தடுப்பது போன்ற விளையாட்டு நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். தினந்தோறும் இதற்கான மாலை நேரத்தில் ஒரு அணிககு 18 பேர் வீதம் 3 அணிக்கு 60 மாணவிகளுக்கான நேரம் ஒதுக்கி ஹாக்கியில் சிறந்த வீராங்கனைகளை உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜூனியர் ஹாக்கி அணி இருந்த போதிலும் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மேம்பாட்டு ஆணையம் நடத்திய முதலவர் கோப்பை ஈரோடு அணி மாணவிகளே தொடர்ந்து 5 முறை வெற்றுள்ளனர் என்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசும் கிடைத்துள்ளது. ரூபாஸ்ரீ என்ற கிராமப்புற மாணவி மூன்று முறை முதல்வர் விருதது பெற்றதால் ரூ.3 லட்சம் பெற்றார். திறமையிருந்தால் விளையாட்டு மூலம் பொருளாதார ரீதியாக உயர முடியும் என சாதித்து காட்டியுள்ளார் பயிற்சியாளர் அருள்ராஜூ.
இப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்று தற்போது கல்லூரியில் படிக்கும் ரூபாஸ்ரீ, தமிழக ஹாக்கி அணி சார்பில் கேரளா மாநிலம் கொல்லத்தில் விளையாடி, இந்தியன் கேம்ப் எனப்படும் தேசிய அளவிலான அணிக்கு 32 பேரில் ஒருவராக ரூபாஸ்ரீயும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஹாக்கி அணி, 19 வயதுக்குட்பட்டோர் ஹாக்கி என மூன்று அணிகளை உருவாக்கி 60 பேரை சிறந்த வீராங்கனைகளாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கானாவில் ஜூனியர் ஹாக்கி மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூனியர் ஹாக்கி போட்டிக்கு வீராங்கனை தயார் படுத்தி வருகிறார்.
திறமைக்கு வறுமை தடையில்லை விளையாட்டு துறையிலும் பொருளாதார ரீதியாக உயர்த்த முடியும் என்றும் வாழ்நாளில் ஒரு வீராங்கனையாவது இந்தியாவுக்கு விளையாட வைப்பது என்ற உயர்ந்த சிந்தனையாக கொண்டு அதனை அர்ப்பணிப்போடு செயல்படுத்தி வருகிறார் அரசப்பள்ளி பயிற்சியாளர் அருள்ராஜூ.

tn--_erd_03_sathy_hockey_sports-_vis_tn10009
பேட்டி:
பயிற்சியாளர் அருள்ராஜூ மற்றும் மாணவி ரூபாஸ்ரீ

tn--_erd_03a_sathy_hockey_sports-_byte_rupasri_tn10009
tn--_erd_0b_sathy_hockey_sports-_byte_arulraj_tn10009
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.