ETV Bharat / sports

ஹாக்கி : மலேசியாவின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்குமா இந்திய ஹாக்கி அணி? - மன்ப்ரீத் சிங்

மலேசியா : 2019 சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரின் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வலிமையான மலேசியாவை எதிர்கொள்கிறது.

இந்திய ஹாக்கி அணி
author img

By

Published : Mar 25, 2019, 11:26 PM IST

28ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி ஜப்பானை 2-0 என வீழ்த்தியது. இரண்டாம் போட்டியில் இந்தியா- தென் கொரியா அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தின் கடைசி நிமிட கோலால் 1-1 என டிராவானது.

இந்நிலையில், இந்திய அணி மூன்றாவது போட்டியில் வலிமையான மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியதையடுத்து, முற்றிலும் இளம் வீரர்களுடன் களமிறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், நாளையப் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மலேசியா அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், முதல் இரு போட்டிகளிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.அதில் போலாந்தை 5-1 மற்றும் ஜப்பானை 4-3 என வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

hockey
நாளைய ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது

இதனையடுத்து, இந்தியா-மலேசியா அணிகள் ஆடிய கடைசி ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறுகையில், "இந்திய அணியின் அனுபவ வீரர்கள் இளம் வீரர்களை வழிநடத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவ வேண்டும். நாளையப் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார்.

Intro:Body:

hockey

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.