கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால், அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில தினங்களாக ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆடவர் பன்டஸ்லிகா தொடர் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிருக்கான பன்டஸ்லிகா கால்பந்து தொடரையும் நடத்த ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு ஆலோசனை மேற்கொண்டிருந்தது. இதையடுத்து இம்மாதம் மே 29ஆம் தேதி மகளிர் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடைபெறும் என ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தலைவர் ஃபிரிட்ஸ் கெல்லர் கூறுகையில், ”மகளிர் பன்டஸ்லிகா தொடர் மீண்டும் தொடங்கப்படவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் மகளிர் பன்டஸ்லிகா தொடர் ஒரு தனிப்பங்கை வகிக்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சாண்டோஸ் அணியைச் சேர்ந்த 8 வீரர்களுக்கு கரோனா உறுதி