2020-21ஆம் ஆண்டிற்கான சீரி ஏ கால்பந்து தொடர் இத்தாலியில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் எஃப்சி அணி - பர்மா எஃப்சி அணியை எதிர்கொண்டது.
முதல் பாதியில் அசத்திய ஜுவென்டஸ்:
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்திலேயே ஜுவென்டஸ் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் குலுசெவ்ஸ்கி (kulusevski) கோலடித்து ஜுவென்டஸ் அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அதன்பின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஜுவென்டஸ் அபார வெற்றி:
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும், தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜுவென்டெஸ் அணிக்கு ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டுமொரு கோலடித்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.
-
FT | ⏱ | WALKING IN A JUVE WONDERLAND!!!! ⚪️⚫️🎅❄️#ParmaJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/eXNky2U9AA
— JuventusFC (@juventusfcen) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FT | ⏱ | WALKING IN A JUVE WONDERLAND!!!! ⚪️⚫️🎅❄️#ParmaJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/eXNky2U9AA
— JuventusFC (@juventusfcen) December 19, 2020FT | ⏱ | WALKING IN A JUVE WONDERLAND!!!! ⚪️⚫️🎅❄️#ParmaJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/eXNky2U9AA
— JuventusFC (@juventusfcen) December 19, 2020
-
✈️🗓 Last away of the year, all three points SEALED! 👌✅#ParmaJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/NNxwp67CSm
— JuventusFC (@juventusfcen) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">✈️🗓 Last away of the year, all three points SEALED! 👌✅#ParmaJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/NNxwp67CSm
— JuventusFC (@juventusfcen) December 20, 2020✈️🗓 Last away of the year, all three points SEALED! 👌✅#ParmaJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/NNxwp67CSm
— JuventusFC (@juventusfcen) December 20, 2020
அவரைத் தொடர்ந்து அந்த அணியின் மொராடா ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதனால் ஆட்டநேர முடிவில் ஜுவென்டஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பர்மா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜுவென்டஸ் எஃப்சி அணி சீரி ஏ தொடரில் 27 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:சதத்தை பதிவு செய்யாமல் 2020ஆம் ஆண்டை நிறைவு செய்த விராட் கோலி!