கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லா லீகா கால்பந்து தொடர், பார்வையாளர்கள் இல்லாமல் ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, ஜூன் 13ஆம் தேதி (சனிக்கிழமை) பார்சிலோனா-ரியல் மாலோர்கா அணிகள் மோத உள்ளன.
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக, முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையில் பார்சிலோனா அணியினர் கடந்த மாதம் முதல் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வார தொடக்கத்தில் மெஸ்ஸிக்கு காலில் காயம் ஏற்பட்டதாகச் செய்தி வெளியானது. இதனால், அடுத்த வாரம் லா லீகா போட்டியில் அவர் இடம்பெறமாட்டார் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், பார்சிலோனா அணியினருடன் சேர்ந்து மெஸ்ஸி நேற்று (ஜூன் 6) கேம்ப் நோவாவில் பயிற்சி மேற்கொண்டதாக, அந்த அணி நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மெஸ்ஸியின் வருகை அவரது ரசிகர்கர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : 'கரோனா பரிசோதனைக்கு ரூ. 3 ஆயிரம் கட்டணம்' - மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு