ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுப் போட்டியில், யுவெண்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ மேட்ரிட்டை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் யுவெண்டஸ் அணி இரண்டு கோல் பின்தங்கிய நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ அசத்தலான ஹாட்ரிக் கோல் அடித்தார். இதனால், யுவெண்டஸ் அணி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் அத்லெடிக்கோ மேட்ரிட்டை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதனை கொண்டாடும் விதமாக ரொனால்டோ, அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் பயிற்சியாளரான டியகியோ சிம்ஓனின் கொஜோன்ஸ் எனப்படும் ஆக்ரோஷமான செலப்பிரேஷன் கிண்டலடித்தார்.
போட்டிகளின் ஒழுங்கீனம் மீறி ரொனால்டோ நடந்துக் கொண்டதால், அவர் மீது விசாரணை நடைபெறும் என ஐரோப்பிய கால்பந்து குழு தெரிவித்துள்ளது. இதனால், அவருக்கு அதிகபட்ச தண்டணையாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து யுவெண்டஸ் அணியின் பயிற்சியாளர் பேசுகையில், களத்தில் ஒவ்வொரு வீரர்களும் அவர்களுக்கான ஸ்டைலில் கொண்டாடுவார்கள். அதுபோன்றுதான் ரொனால்டோவும் கொண்டாடினார். அதில், தவறு ஏதும் இல்லை. இதனால், அவர் மீது தடை ஏதும் இருக்காது என தெரிவித்தார்.
முன்னதாக, அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் பயிற்சியாளர் டியகியோ சிம்ஓன் இதுபோன்ற செலப்பிரேஷனில் ஈடுபட்டதால், அவருக்கு 20,000 யூரோக்கள் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், யுவெண்டஸ் அணி, அஜக்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.