சென்னை: இந்திய கால்பந்து தொடர்களில் முக்கியமானது ஐ-லீக் கால்பந்து தொடர். இத்தொடரின், 15ஆவது சீசன் (2021-22) கரோனா தொற்று காரணமாக கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை 10 அணிகளுக்கு பதிலாக 12 அணிகள் தொடரில் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரை தலைமையிடமாக கொண்ட நேரோகா கால்பந்து கிளப் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்பநிதி தகுதி பெற்றுள்ளார். இவர் நடிகரும், சேப்பாக்கம் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Transfer alert ⚠️
— Neroca FC (@NerocaFC) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Another one from Chennai's Trials. We are happy to announce the signing of the young defender Inban Udhyanidhi . Welcome to orange brigade🍊 #newsigning #ileague #indianfootball #orangebrigade #transferalert pic.twitter.com/N3WESS79bg
">Transfer alert ⚠️
— Neroca FC (@NerocaFC) August 25, 2021
Another one from Chennai's Trials. We are happy to announce the signing of the young defender Inban Udhyanidhi . Welcome to orange brigade🍊 #newsigning #ileague #indianfootball #orangebrigade #transferalert pic.twitter.com/N3WESS79bgTransfer alert ⚠️
— Neroca FC (@NerocaFC) August 25, 2021
Another one from Chennai's Trials. We are happy to announce the signing of the young defender Inban Udhyanidhi . Welcome to orange brigade🍊 #newsigning #ileague #indianfootball #orangebrigade #transferalert pic.twitter.com/N3WESS79bg
இளம் தடுப்பாட்ட வீரர்
இதுகுறித்து நேரோகா அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " சென்னையை சேர்ந்த இளம் தடுப்பாட்ட வீரரான இன்பநிதியை எங்கள் அணிக்கு தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்" எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-21ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ-லீக் தொடரில் கோகுலம் கேரளா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tokyo Paralympics: பவினாபென் படேல் ரவுண்ட் ஆஃப் 16க்கு முன்னேற்றம்